நவம்பர் 15, கல்வீரம்பாளையம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 25 வயதுடைய இளம்பெண், எம்.எஸ்.சி பட்டதாரி ஆவார். கோவையில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின் பணியை துறந்து இருக்கிறார். பணியில் சேரும்போது நிறுவனத்தின் சார்பில் கல்விச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பெண் பணியில் இருந்து நின்றதும், அதனை கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதுர்யமாக மாணவியை வரவழைத்த ஆசிரியர் (Young Girl Sexually Harassed by Professor):
இதனால் கோவையில் தான் படிக்கும்போது, தனக்கு பாடம் எடுத்த கல்வீரம்பாளையம், முருகன் நகரில் வசித்து வந்த பேராசிரியர் சிவப்பிரகாசம் (வயது 45) என்பவரை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். அவர் தான் விசாரித்து சொல்வதாக கூறிய நிலையில், சில நாட்களுக்கு முன் மாணவிக்கு தொடர்புகொண்டவர், சான்றிதழை தான் வாங்கி வைத்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து, கோவைக்கு மாணவியை நேரில் அழைத்துள்ளார். Drug Smuggling Gang: காய்கறி வியாபரம் செய்வதாக வீடு எடுத்து கஞ்சா, போதை காளான் விற்பனை; கோவையில் கைதான கும்பல் திடுக்கிடும் வாக்குமூலம்.!
பலாத்கார முயற்சி:
பேராசிரியரின் வார்த்தையில் உண்மை இருப்பதாக நம்பி கோவையில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது வீட்டில் ஆசிரியர் மட்டுமே இருந்த நிலையில், அவர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவாறு, திடீரென பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பதறிப்போன பெண்மணி, பேராசிரியரின் பிடியில் இருந்து தப்பித்து, அந்த வீட்டின் குளியலறைக்குள் சென்று தஞ்சம் புகுந்தார்.
பத்திரமாக மீட்ட காவல்துறையினர்:
அவரின் செல்போனையும் கையில் எடுத்துச் சென்றதால், தோழிக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டு லொகேஷனை அனுப்பி வைத்துள்ளார். தோழியின் நிலைமையை புரிந்துகொண்ட அந்த பெண்ணோ, உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர். மேலும், சிவப்பிரகாசம் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, இளம்பெண்ணின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.