Youth Dies by Suicide: பெற்றோரின் பிரிவால் வாடிய மகன்; விஷம் குடித்து விபரீத முடிவு.. திருச்சியில் சோகம்.!
தனது அன்பிற்கிணங்கிய பெற்றோர், அவர்களின் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனழுத்தத்தில் பாசத்திற்கு ஏங்கித் தவித்த மகன் தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 26, தொட்டியம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் ஒன்றியம், கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ராமராஜ். இவரின் மகன் செந்தில் குமார் @ பிரசாந்த். ஐடிஐ பயின்றுவிட்டு, திருச்சியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ராமராஜ், தனது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். Scam Alert: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி.. ஆசிரியர் தம்பதி அதிரடி கைது..!
மனவருத்தம்:
இதனால் பிரசாந்த் தனது தாத்தாவின் வீட்டிலேயே வசித்து வருகிறார். பெற்றோரின் பிரிவு என்பது பிரசாத்துக்கு மிகுந்த மனவேதனையை அளித்து இருக்கிறது. இதனால் வருத்தத்திலேயே சுற்றிவந்த அவர், மனஉளைச்சல் தாங்காமல் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
பின் தான் தற்கொலை முயற்சி செய்தது தொடர்பாக தாத்தாவிடம் தெரிவிக்கவே, அவர் உடனடியாக பேரனை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தார். எனினும், பிரசாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Aug 17, 2823 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

