Buldak Noodles Death in Trichy (Photo Credit: Facebook / @yatsmugi X)

செப்டம்பர் 03, திருவெறும்பூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜாக்குலின், நூடுல்ஸ் (Noodles) விரும்பி என கூறப்படுகிறது. அவ்வப்போது தனது உணவாக அவர் நூடுல்ஸையே சாப்பிட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். பின் மறுநாள் காலையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மீட்கப்பட்டார்.

நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி மரணம்:

மகளை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அவரின் மரணம் உறுதி செய்யப்படவே, காவல் துறையினர் சிறுமியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வந்தது. இதனிடையே, நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை தமிழ்நாட்டில் உண்டாக்கி இருந்தது. Namakkal Shocker: கள்ளகாதலுக்காக 4 வயது சிறுமி கொலை; 21 தாயின் அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! 

அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்:

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அரியமங்கலத்தில் மறைந்த சிறுமி ஜாக்குலின், அமேசானில் இருந்து புல்டாக் ஸ்பைசி (Buldak Spicy) சைனீஸ் நூடுல்ஸை (Chinese Noodles) வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். இதனுடன் கோக் ஒன்றும் வாங்கி குடித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு:

இதன்பேரில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வில் 800 கிலோ அளவிலான காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நூடுல்ஸ் மொத்த விற்பனையாளர்களை கண்காணித்து, கிட்டங்கிகளில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறினார். Trichy Shocker: நூடுல்ஸ் சாப்பிட்ட 16 வயது சிறுமி மரணம்; திருச்சியில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.! 

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

இதன் வாயிலாக சிறுமியின் மரணத்திற்கு, காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது. வீடுகளில் நூடுல்ஸ் வாங்கி சமைப்போர் அதனை தவிர்ப்பதும், ஆசைப்பட்டு சாப்பிடுவோர் நூடுல்ஸ் பாக்கெட்டில் காலாவதி தேதியை பார்த்து செயல்படுவதும் நல்லது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் விளக்கம்:

இதனிடையே, சிறுமி மரணமடைந்த விவகாரத்தில், நூடுல்ஸ் தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை என்பது இல்லை. தொண்டையில் நூடுல்ஸ் சிக்கிக்கொண்டதால், அவர் மூச்சுத்திணறி உயிரிழந்து இருக்கிறார் என திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்து இருக்கிறார்.