Electrocution Death: இரும்பு கம்பியில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி., வேலூரில் சோகம்.. மின்விளக்கு பணியில் துயரம்.!

தெருவிளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேர்ந்த சோகம் நடந்துள்ளது.

Electrocution Death: இரும்பு கம்பியில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி., வேலூரில் சோகம்.. மின்விளக்கு பணியில் துயரம்.!
Death | Electric Shock File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 28, அணைக்கட்டு (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, வேப்பங்குப்பம் கிராமம், ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதற்காக வேப்பங்குப்பம் ஊராட்சியில், பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 45), ஏரி காலனியில் வசித்து வரும் அசோக் குமார் (வயது 55) ஆகியோர் சம்பவத்தன்று ஈடுபட்டனர். School College Holiday: ஃபெங்கால் புயல் Fengal Puyal எதிரொலி; பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! 

மின்சாரம் தாக்கி பலி:

இதனிடையே, இருவரும் இரும்பு மின்கம்பத்தை தூக்கி நிலைநிறுத்தி இருக்கின்றனர். அப்போது, மேலே சென்ற மின்சார கம்பிகளை அலட்சியப்படுத்தாக தெரியவருகிறது. இதனால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தெருவிளக்கு மின்கம்பத்தின் மீது பாய்ந்து, நேரடியாக முத்துக்குமரன், அசோக் குமார் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல்துறையினர் விசாரணை:

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. முத்துகுமாரனுக்கு உதவி செய்ய வந்த அசோக் மின்சாரம் தாக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது.

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 07:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).