நவம்பர் 28, சென்னை (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணிநேரத்தில் ஃபெங்கால் புயலாக (Fengal Cyclone) உருவாகி வலுப்பெறுகிறது. இப்புயல் (Fengal Puyal) அக்.30 அன்று புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். இதனால் இலங்கை, வடதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் புயல் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 100 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 320 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 490 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. Fengal Cyclone: ஃபெங்கால் புயல் Fengal Puyal கரையை எங்கே கடக்கும்? அதிகாரபூர்வ அறிவிப்பு.. புயலின் தற்போதைய நிலை இதோ.!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:
புயலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதலாக வடகடலோர மாவட்டங்கள், சென்னை, கடலோரத்தின் உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று மட்டும் மிதமான அளவு மழை பெய்தது. இந்நிலையில், இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி-காரைக்கால் விடுமுறை அறிவிப்பு:
கன மழை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... pic.twitter.com/Es1LR1cp9t
— மாறன் சரக்கொன்றையார் Maaran Sarakkonraiyar (@sarakkonraiyaar) November 27, 2024