Virudhunagar News: காதல் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. கொன்று கிணற்றில் வீசிய மகன்.!

படிக்க அறிவுறுத்தி காதல் விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் விருதுநகரை அதிரவைத்துள்ளது. விருதுநகர் கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Virudhunagar News: காதல் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. கொன்று கிணற்றில் வீசிய மகன்.!
Virudhunagar Murder Case Accuse 04 May 2025 (Photo Credit : YouTube)

மே 04, விருதுநகர் (Virudhunagar News Today): விருதுநகர் மாவட்டம் காரியத்தை பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இளவயதுடைய மகன் தவமணி ஆகியோர் இருக்கின்றனர். ஆடு மேய்த்து கால்நடை வியாபாரம் செய்து வரும் முருகன், தனது மகன் தவமணியை படிக்க அறிவுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், படிப்பில் கவனம் செலுத்தாமல் தந்தையுடன் ஆடு மேய்ப்பது, இன்ஸ்டாக்ராமை நோண்டிக்கொண்டு இருப்பது, அதில் அறிமுகமான பெண்ணுடன் பேசி காதலித்து என தவமணி தறிகெட்டு திரிந்துள்ளார். இதுதொடர்பாக அவ்வப்போது தந்தை - மகன் இடையே வாக்குவாதமும் நடந்துள்ளது. Trending Video: சாரே! தங்கம் என்ன விலை? நகைக்கடைக்குள் ரைடு விட்ட புள்ளி மான்.. பதறிப்போன மக்கள்.! 

தந்தை கொடூர கொலை:

இந்நிலையில், சம்பவத்தன்று முருகன் வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 2 நாட்களாக அவர் எங்கேனும் வியாபார விஷயமாக வெளியூர் சென்று இருக்கலாம் என குடும்பத்தினரும் கண்டுகொள்ளவில்லை. நேற்று முஷ்டக்குறிச்சி பகுதியில் இருக்கும் விவசாய கிணறு ஒன்றில் சாக்கு மூட்டை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாயமான முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. Coimbatore News: சிறுவனுக்கு அவசர உதவி.. 3 மணிநேரத்தில் போராடி உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!

விசாரணையில் பரபரப்பு தகவல்:

முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த உறவினர்கள் பலரும் அவரின் உடலை கண்டு கதறியழுதனர். அப்போது, அவரின் மகன் தவமணி சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றார். இதனால் அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது காதல் விஷயம், படிக்கச்சொல்லி அறிவுரை வழங்கியது என தந்தையின் கோரிக்கையால் கடுப்பான தவமணி, இன்ஸ்டாகிராம் கூட்டாளி அபுபக்கர் உட்பட 2 பேருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து உடலை சாக்கில் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).