Jewellery Theft: வீடு வீடாக சென்று கொள்ளையடித்த திருட்டு பாட்டி.. சென்னை மக்களே உஷார்.!

மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்து நகைகள் பணத்தை திருடிய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Gold Jewels (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 06, மாங்காடு (Chennai News): சென்னை மாங்காடு அருகே உள்ள பகுதியில், காலை 9 மணி அளவில் கையில் பைபிள் வைத்திருந்த மூதாட்டி ஒருவர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக நோட்டமிட்டபடி செல்வதும், வீட்டுக்குள் நுழைவதை வீட்டில் இருக்கும் பெண்கள் பார்த்துவிட்டால், "இது டீச்சர் வீடு தான?" என்று தான் முகவரி மாறி வந்துவிட்டது போல கூறிவிட்டு, வெளியே செல்வதுமாக இருந்துள்ளார். Sivaganga Shocker: முன்விரோத தகராறில் இளைஞர் கொடூர கொலை; கண்மாயில் சடலமாக மீட்கப்பட்ட உடல்.!

தொடர்ந்து திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து பீரோவில் உள்ள நகைகளை எடுத்து கொண்டு படிக்கட்டு வழியே இறங்கியுள்ளார். அப்போது அந்த வீட்டிற்குள் இருந்த பெண் பார்த்து கூச்சலிட்ட நிலையில், படிகள் வழியாக குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்ததில் தங்க நகையை கண்டுபிடித்தனர். பின்னர் மூதாட்டியின் கையில் வைத்திருந்த பைபிளை சோதனை செய்ததில் அதில் சில துண்டு சீட்டுகள் இருந்துள்ளது. அந்த சீட்டில் எந்நெந்த பகுதிக்கு எந்தெந்த வீட்டிற்கு சென்று திருட வேண்டும் என்று பட்டியல் போட்டு வைத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement