செப்டம்பர் 06, மானாமதுரை (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை (Manamadurai), கீழப்பசாலை கிராமத்தில் வசித்து வருபவர் பிரவீன். கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பேக்கரியில் தற்போது வேலை பார்த்து வருகிறார். இவர்களின் கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக பிரவீன் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளார். செப்.01 ம் தேதி மானாமதுரை பேருந்து நிறுத்தம் வந்தவரை, அவரின் 3 நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
ஐந்து பேர் கும்பலால் வெட்டிக்கொலை:
அச்சமயம், ஐந்து பேர் கொண்ட கும்பலானது இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்த முற்படவே, அதிர்ந்துபோன நண்பர்கள் பிரவீனை மட்டும் தனியாக விட்டுவிட்டு தப்பிசென்றனர். தங்களின் கைகளில் சிக்கிய பிரவீனை, ஐவர் கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. பிரவீனை கடத்திச்சென்ற கும்பல், அவரை கொலை செய்து கண்மாயில் சடலத்தை விட்டுச் சென்றது. Thanjavur: காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் தானம்; காவலர்களின் மனதை வென்ற தஞ்சை ஷாஜகான்.!
இருதரப்பு தகராறு, முன் விரோதத்தில் இளைஞர் கொலை:
தகவல் அறிந்த காவல்துறையினர், பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மார்ச் 01ம் தேதி, மானாமதுரை இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வேலை பார்த்து வந்த சிவகுமாரை, கீழப்பசாலை கிராமத்தை சேர்ந்த சிலர் வெட்டியதாக தெரியவருகிறது.
குற்றவாளிகள் மூவருக்கு எலும்பு முறிவு:
இந்த விவகாரத்தில் சசிகுமார் கைகளை இழந்து இருக்கிறார். இந்த கும்பலிடம் பிரவீன் நெருங்கி பழகிய நிலையில், சசிகுமார் ப்ரவீனுக்கும் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று ஊருக்கு வந்த பிரவீனை, சசிகுமார் மற்றும் அவரது தலைமையிலான 5 பேர் கும்பல் கொலை செய்தது அம்பலமானது. அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் சசிகுமார், தனுஷ், ரகுபதி, அமர்நாத், சுதர்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது நடவடிக்கையின்போது தப்பிச்செல்ல முயன்று கீழே விழுந்து மூவர் எலும்பு முறிவை எதிர்கொண்டனர். இவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.