Bus Accident: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!

திருப்பூர் நோக்கி பயணம் செய்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியாகினர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Bus Accident: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!
ChinnaSelam Bus Accident Visual (Photo Credit: Maalaimalar.com)

ஆகஸ்ட் 08, சின்னசேலம் (Bus Accident): புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று இரவு புறப்பட்ட தனியார் பேருந்து, இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் பயணம் செய்துகொண்டு இருந்தது.

பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், அதிகாலை பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். SUV Plunges: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்; நொடியில் கார் ஓட்டுனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு வீடியோ உள்ளே.!

இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் ஓட்டுனரின் உறக்க கலக்கத்தில் விபத்து நடந்ததா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 07:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).