SUV Plunged (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 08, சீனா (World News): வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஹெலியோங்ஜிங் (Heilongjiang) மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கடந்த சில வாரங்களாகவே சீனாவில் இருக்கும் பீஜிங், ஹெபல் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பிலிப்பைன்ஸில் ஆரம்பித்த டாக்ஸுரி புயல் (Doksuri Typhoon) சீனாவையும் புரட்டியெடுத்தது.

இந்நிலையில், சீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒருவழிப்பாதையில் இழுத்து செல்லப்பட்டு இடிந்து தரைமட்டமாகியுள்ளது. Ileana D’Cruz Baby: அடடே.. நம்ம இடுப்பழகி இலியானாவின் குழந்தையை பார்த்தீங்களா?.. எவ்ளோ கியூட் செல்லம்.!

இதனை அறியாமல் அவ்வழியே சென்ற SUV ரக கார், பயணித்த வேகத்தில் பள்ளத்தில் சிக்கியது. அந்த காருக்கு பின்னால் சில அடி தொலைவில் வந்த மற்றொரு கார் ஓட்டுநர் சுதாரித்து விரைந்து காரை நிறுத்தினார்.

இந்த சம்பவம் காரின் டேஷ்கேமில் பதிவாகி இருக்கிறது. புயலின் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், காயத்துடன் இருந்த கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர்.

சீனாவின் ஸுலன் நகரில் வெள்ளம் காரணமாக 4 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். பீஜிங் மற்றும் ஹெபெல் மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.