Kalyana Rani Sathya Case: 15 பேருடன் திருமணம்.. பல பேருடன் காதல்.. கல்யாண ராணி சத்யா லீலைக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்.. புதுச்சேரியில் கைது..!

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Kalyana Rani Sathya Case: 15 பேருடன் திருமணம்.. பல பேருடன் காதல்.. கல்யாண ராணி சத்யா லீலைக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்.. புதுச்சேரியில் கைது..!
Kalyana Rani Sathya (Photo Credit: @thatsTamil X)

ஜூலை 16, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு வயது 34. இவருக்கு பல வருடங்களாக வரம் தேடியும் கிடைக்காமல் இருந்துள்ளது. தொடர்ந்து இணையதள வழியாக பெண் தேடி உள்ளார். அப்போது ஈரோடு மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த பழனிசாமியின் மகள் சத்யா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு வயது 40. இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு தொடங்கி பின் காதலாக மாறி கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

கல்யாண ராணி சத்யாவின் லீலைகள்: சிறிது நாட்களுக்குப் பின்பு சத்யா பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்று பிரகாசிற்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார். அந்தப் புகாரில் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. Former AIADMK MR Vijayabaskar Arrested: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்‌ விஜயபாஸ்கர் கைது எதனால்?.. தலைசுற்றவைக்கும் விவகாரம்‌‌.. பின்னணி இதோ.!

சத்யா தலைமறைவு: இந்த புகாரினைத் தொடர்ந்து சத்யா மற்றும் புரோக்கர் தமிழ்ச்செல்வி இருவரும் தலைமறைவாக இருந்தனர். சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து கரூரை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகையும் திருமணம் செய்துள்ளார். இவ்வாறு இதுவரை கிடைக்கப்பட்ட தகவலில் 15 பேரை திருமணம் செய்துள்ளார். பலரிடம் காதல் நாடகம் ஆடியுள்ளார். இவர்களிடமிருந்து பணம் பறித்துவிட்டு ஓடுவதை தொழிலாக வைத்திருந்தார்.

புதுச்சேரியில் கைது: சிலரிடம் ஆபாச வீடியோக்களை எடுத்து குடும்பத்திடம் காட்டி விடுவேன் என மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் சத்யா மீது வழக்கு கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சக்தியாக அவரது செல்போன் சிக்னல் மூலம் காவல்துறையினர் அவரது பதுங்கல் இடத்தை கண்டறிந்தனர். தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சத்யாவை புதுச்சேரியில் கைது செய்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).