ஜூலை 16, திருவனந்தபுரம் (Thiruvanathapuram): கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (Former AIADMK minister MR Vijayabaskar) போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்துள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரகாஷ் தரப்பிலிருந்து போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நில அபகரிப்பு வழக்கு: இந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே, நில மோசடி வழக்கு கடந்த 14ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் விஜபாஸ்கரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. Bluetooth Speaker Buying Guide: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்குவது நல்லதா?.. எப்படி அதனை தேர்வு செய்வது?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
விஜயபாஸ்கர் தலைமறைவு: இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். வட மாநிலங்களில் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக தேடினர். இந்நிலையில் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு தனிப்படை காவல் துறையினர் சென்றனர். கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு வந்த நிலையில் இன்று காலை அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர் செய்யப்பட்டப்பட்ட பின்னர் கரூர் பகுதிக்கு அழைத்து வரப்படுவார் என்று கூறப்படுகிறது.