Colachel | Instagram (Photo Credit: Facebook / Pixabay)

மே 05, குளச்சல் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை (Colachel, Kanyakumari) சேர்ந்தவர் விஜூ (வயது 19). இவர் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வைத்துக்கொண்டு, அதனை இன்ஸ்டாகிராமில் (Instagram Biker) விடியோவாக பதிவேற்றி பார்வையாளர்களை பெற்றுள்ளார். இவரின் தந்தை கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரின் மீது 2 கஞ்சா வழக்குகள் (Cannabis Smuggling Case) நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில், கணவரை இழந்து தனது 17 வயது மகளுடன் பெண்மணி வசித்து வந்துள்ளார். 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய விஜூ, அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். சிறுமியின் தாய் அங்குள்ள மளிகை கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

மகளின் காதல் விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவரவே, அவர் விஜூவை அழைத்து தான் கணவர் இன்றி பிள்ளையை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன் என்பதால் காதல் வேண்டாம் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மாணவியை தனது தம்பி மூலமாக பெங்களூரில் படிக்க வைக்கவும் ஏழைத்தாய் முயற்சி மேற்கொண்டுள்ளார். Women Teacher Abuse Minor Student: 16 வயது சிறுவனுடன் முறையற்ற உறவு.. 40 வயது கணித ஆசிரியை போக்ஸோவில் கைது; திருச்சியில் பகீர்.!

தாயின் கண்டிப்பால் முதலில் அமைதியாக இருந்த விஜூ, பின்னர் சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் பின்தொடர்ந்து தன்னுடன் பேசக்கூறி சண்டை செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என்றும் மிரட்டவே, சிறுமியும் வேறு வழியின்றி பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை நேரில் பார்த்த விஜூ, தனது இருசக்கர வாகனத்தில் மிரட்டி ஏற்றி அழைத்து சென்றுள்ளார். விஜூ கஞ்சா போதையில் இருந்துள்ளார். இதனால் வாகனத்தில் அதிவேகத்தில் பயணம் செய்த நிலையில், இருவரும் சென்ற வாகனம் அங்குள்ள குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் விபத்திற்குள்ளானது. விபத்தில் சுதாரித்த விஜூ எழுந்து அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு அனுமதியாகினார். Sara Ali Khan: அட்டகாசமான கிளிக்ஸ்.. பார்க்கப்பார்க்க பரவசமாகும் ரசிகர்கள்.. சாரா அலி கானின் இன்ஸ்டா போட்டோ வைரல்…!

சுமார் ஒருமணிநேரம் சாலையில் உயிருக்கு போராடிய சிறுமியை, அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தன்னிடம் வசத்தில் இல்லை என்று கூறிய தாய், மகளை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார்.

அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குளச்சல் காவல் துறையினர், விஜூவிடம் விசாரணை நடத்துகையில் கஞ்சா போதையில் சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பின்னர், அங்கு விபத்திற்குள்ளானதும் தான் மட்டும் வாகனத்தை மீண்டும் இயக்கி தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.