#Breaking: கிருஷ்ணகிரி வணிகர் சங்க தலைவர், பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! வீட்டில் நடந்த சோகம்.!
வெங்கடேஸ்வரா நகைக்கடை உரிமையாளர், ரியல் எஸ்டேட் அதிபர், தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தற்கொலை செய்துகொண்டது குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் அதிரவைத்துள்ளது.
அக்டோபர் 13, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க நகர தலைவர், பிரபல தொழிலதிபர் (Krishnagiri Businessman M.B.Suresh Suicide) எம்.பி சுரேஷ். இவர் வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Delhi Air Quality: டெல்லி மக்களை பதறவைத்த காற்றின் தரம்; மிகவும் மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!
தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரின் தற்கொலைக்கு காரணம் என்ன? என விசாரணை நடந்து வருகிறது. இன்று காலை 07:15 மணிக்கு மேல் வீட்டில் இருந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிருஷ்ணகிரி காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர்.
தொழிலதிபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

