வானிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 21, சென்னை (Chennai News): வானிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வானிலை (Weather):
இதனால், இன்று (21-01-2025) முதல் வரும் 23-01-2025 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை; படித்துக்கொண்டிருந்தவர் விபரீத முடிவு.. பெற்றோர் கண்ணீர்.!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (21-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

