Hanging | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, கருங்கல் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், தொலையாவட்டம், கண்டகுழிவிளை கிராமத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு ஷாஜினி (வயது 15) என்ற மகள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் ஷாஜினி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

படித்துக்கொண்டு இருந்த சிறுமி:

நேற்று முன்தினத்தில் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு சென்றிருந்த சிறுமி, மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தார். அங்கு தனது சகோதரருடன் மாடி அறையில் படித்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியின் தம்பி உணவு சாப்பிட தரைதளத்திற்கு வந்துவிட்டார். Job Alert: அமீரகத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு; நாளை சென்னையில் நேர்காணல்.. அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.! 

தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி:

மேல்தளத்தில் இருந்த மகளை தந்தை சிவகுமார் பலமுறை அழைத்து பார்த்தும் பலனில்லை. இதனால் மாடிக்கு அவர் சென்றபோது, மகள் தூக்கில் சடலமாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மகளை மீட்டு புதுக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

காவல்துறை விசாரணை:

அங்கு சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.