LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.!

செப்டம்பர் 2025 மாதத்துக்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.!
Gas Cylinder (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 01, சென்னை (Chennai News): ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் உற்பத்தி & சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. கச்சா எண்ணெய் கிடைக்கும் அளவு, அதன் தேவை, உலகளாவிய பயன்பாடு மற்றும் சந்தை மதிப்பு, இதர செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலை (LPG Gas Cylinder Price August 2025) நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. Chennai: நாளை முதல் உயரும் டீ, காபி விலை.. மக்களுக்கு ஷாக் நியூஸ்.! 

சமையல் எரிவாயு விலை இன்று:

அந்த வகையில், மத்திய அரசின் தலையீடு காரணமாக வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு விலை இதுவரை மாற்றம் செய்யப்படாமல் ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு விலை சென்னையில் ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,789 க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் மேலும் குறைந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 07:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).