ஆகஸ்ட் 31, சென்னை (Chennai News): தலைநகர் சென்னையில் நாளை முதல் டீ, காபி உட்பட பால் பொருட்களின் விலை உயர்வதாக டீக்கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து உயர்ந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்படுகிறது. காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை, டீ, காபித்தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, பெருநகரங்களில் அதிகரித்துள்ள கடை வாடகை மற்றும் பிற வரிகள் போன்றவை காரணமாக விலை உயர்வு அமலாகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர்: மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய தோழி.. கல்லூரி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!
அதன்படி 01-09-2025 முதல் புதிய விலைப்பட்டியல் பின்வருமாறு,
புதிய விலைப்பட்டியல் :
- பால் விலை - ரூ.15
- லெமன் டீ - ரூ.15
- காபி - ரூ.20
- ஸ்பெஷல் டீ - ரூ.20
- ராகிமால்ட் - ரூ.20
- சுக்கு காபி - ரூ.20
- பூஸ்ட் - ரூ.25
- ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல் விலை பட்டியல் :
- கப் பால் - ரூ.45
- கப் காபி - ரூ.60
- ஸ்பெஷல் டீ - ரூ.60
- ராகிமால்ட் - ரூ.60
- சுக்கு காபி - ரூ.60
- பூஸ்ட் - ரூ.70
- ஹார்லிக்ஸ் - ரூ.70
இது தவிர்த்து சிற்றுண்டிகளாக விற்பனை செய்யப்படும் வடை, பஜ்ஜி, சமோசா போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுகிறது. அதன்படி போண்டா, பஜ்ஜி, சமோசாவின் விலை குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.