Love Cheating Ends Jail: 23 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக சீரழித்து சித்ரவதை; இன்ஸ்டா காதலனை கம்பி என்ன வைத்த இளம்பெண்.!
அன்பின் மிகுதியால் உருவாகும் காதலை வைத்து இன்றளவில் பல்வேறு மோசடி செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாறான கேடுகெட்ட காதலால் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது பெண்களே என்பது மறுக்க இயலாதது.
பிப்ரவரி 23, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்புரம் பகுதியில் 23 வயதுடைய பெண்மணி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இருவரும் சமூக வலைதள செயலிகளை அதிகளவு பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே, இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் 23 வயது இளம்பெண்ணிடம் அருண்குமார் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஊட்டி, கொடைக்கானல் உற்சாக பயணம்: முதலில் நட்பாக பழகி வந்த அருண்குமார், பின்னாளில் அவரை காதலிப்பதாக கூறி தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். காதல் மயக்கத்தில் இருந்த பெண்ணை அருண்குமார் ஆசை வார்த்தை கூறி ஊட்டி, கொடைக்கானல் உட்பட பல சுற்றுலாத்தலங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். அங்கு பெண்ணை நிர்வாணமாக அருண் வீடியோ எடுத்து வைத்ததாகவும் தெரியவருகிறது.
வேறொரு பெண்ணுடன் முடிந்த நிச்சயம்: இந்நிலையில், அருண் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த அவரின் பெற்றோர், வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த இளம்பெண், அருண் குமாரிடம் சென்று முறையிட்டு இருக்கிறார். மேலும், தன்னையே நீ திருமணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். IPL 2024 Schedule: ஐபிஎல் 2024 போட்டிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு; முதல் 21 போட்டிகளுக்கான அசத்தல் அறிவிப்பு வெளியீடு.. விபரம் இதோ.!
தாயும்-மகனுமான மிரட்டல்: இதற்கு மறுப்பு தெரிவித்த அருண்குமார், முடிந்தது முடிந்துவிட்டது என வசனம் பேசி சென்றுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி அருண் குமாரின் வீட்டிற்கு சென்று, அவரின் தாயாரிடம் தங்களின் காதல் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்றது என விபரத்தை தெரிவித்துள்ளார். தாயும் - மகனுமான 23 வயது இளம்பெண்ணை மிரட்டி அனுப்பி இருக்கின்றனர்.
நிர்வாண வீடியோ காட்டி பலாத்காரம்: பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய அருண்குமார், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருந்தும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலமுறை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்துள்ளார்.
கட்டியவனாகவே இருந்தாலும் தனிமை காட்சிகள் படம்பிடித்தல் கூடாது: புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி, அருண்குமாரை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். காதலிக்கும்போது ஆசையுடன் காதலனை நெருங்கிவிட்டு, அவனை தனிமை காட்சிகளை படம்பிடிக்க அனுமதி வழங்கினால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இது சாட்சி ஆகும். காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் இவ்வாறான கொடுமைகள் தொடர்கதையாகிக்கொண்டு தான் இருக்கும்.
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

