பிப்ரவரி 22, சென்னை (Cricket News): 17வது ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டித்தொடர், மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் நடைபெறுவதக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் உட்பட 10 அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்ற்னர். நடப்பு ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறுவதால், ஐபிஎல் போட்டியை அவை பாதிக்கலாம் என பேச்சுக்கள் எழத்தொடங்கின. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பொறுத்து தேதிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. World Economic Forum: 2047ல் மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா - உலக பொருளாதார மன்ற தலைவர் பேட்டி.!
முதல் 21 ஐ.பி.எல் ஆட்டங்களுக்கான அறிவிப்பு: இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 22 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை தொடங்கும் ஆட்டம் முதல் 7 ஏப்ரல் 2024 அன்று வரை நடைபெறும் ஆட்டத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் சென்னை நகரில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னை நகரில் நடைபெறவுள்ள ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விபரமான அறிவிப்பு பட்டியலை கீழுள்ள இணைப்பு புகைப்படத்தில் காணவும்.
ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா (Jio Cinema) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.
IPL 2024 schedule for the first 21 matches. #IPLOnStar. pic.twitter.com/hNlgoSzae7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2024