Madurai Kamarajar University: பல்கலை.,யில் மாணவிகளை ஆபாசமாக, அவதூறாக பேசிய பேராசிரியர் கருப்பையா கைது.. மாணவர்களின் புகார் எதிரொலி.!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உளவியல் துறை தலைவரின் மீது எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19, மதுரை (Madurai News): அதிகாரத்துடன் கூடிய அலட்சியம் அப்பாவி பெண்களிடையே அத்துமீறலாக மாறுகிறது. இவ்வாறான அத்துமீறல்களை ஒழிக்க பெண்கள் தயங்காது தவறு இழைத்தவர்களின் மீது புகார் அளிக்க முன் வருவதே, அது சார்பான குற்றங்களை குறையும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (Madurai Kamarajar University) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் உளவியல் பாடத்துறை தலைவராக இருப்பவர் கருப்பையா.
சமீபத்தில் கருப்பையா மாணவிகளிடையே அவதூறான மற்றும் ஆபாசமான வகையில் பேசியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். IPL 2023 Match Fixing Racket: முகமது சிராஜிடம் பெட்டிங் டீலிங் பேசிய ஓட்டுநர்; களத்தில் இறங்கிய பிசிசிஐ.. மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் ஐ.பி.எல்..!
புகாரை ஏற்று விசாரணை செய்த கல்லூரி நிர்வாகம், மேற்படி பேராசிரியரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும், மதுரை பல்கலை., மாணவர்கள் சரக டி.ஐ.ஜி பொன்னியிடம் புகாரும் அளித்தனர்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் கருப்பையாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட கருப்பையாவின் மீது மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 19, 2023 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

