ஏப்ரல் 19, புதுடெல்லி (Cricket News): ஐ.பி.எல் (IPL Season) தொடர்களில் முந்தைய காலங்களில் நடந்த பெட்டிங் (Gampling on IPL) சம்பவத்தால் ஒரு அணியே தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஐ.பி.எல் தொடரில் நேரடி மற்றும் மறைமுக பெட்டிங் சம்பவங்கள் (IPL 2023 Match Fixing Racket) இன்றளவும் நடந்து வருகின்றன என்ற தகவல் பதறவைத்துள்ளது. அப்படியான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Ajith Pawar: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜகவில் இணைகிறாரா?.. டென்ஷனுடன் பரபரப்பாக பேட்டியளிப்பு.!
பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிடம் (Mohammed Siraj) மர்ம நபர் ஒருவர் டீலிங் பேசி இருக்கிறார். இதனையடுத்து, முகமது சிராஜ் தகுந்த நபரின் மீது பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் சென்னை அணியின் நிர்வாகி பணம் பெற்றது உறுதியாகி, அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஐ.பி.எல் வெற்றி-தோல்வி சூதாட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.