College Girl Suicide: காதலித்து கர்ப்பிணியாக்கி கைவிட்ட காதலன்; மாணவி விபரீத முடிவு.. காதலன் உட்பட 3 பேர் கைது.!
தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மற்றும் அவனின் குடும்பத்தினர் அவதூறாக பேசி திட்டியதால் மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஏப்ரல் 10, சீர்காழி (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (Seerkazhi), பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி (College Student Sucide) பிரபாவதி. இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி காவல் துறையினர், பிரபாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், பிரபாவதி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞர் பிரபாவதியை காதலித்து வந்துள்ளார். அவருடன் மாணவி நெருங்கி பழகி இருக்கிறார். Viluppuram Murder: போதைக்கு அடிமையான நண்பர்கள்; திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் அடித்தே கொலை; 3 இளைஞர்கள் வெறிச்செயல்.!
இதனால் அவர் 3 மாத கர்ப்பிணியான நிலையில், காதலன் ஆனந்தராஜ் மற்றும் அவரது பெற்றோரிடம் சென்று விஷயத்தை கூறி திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். ப்ரபாவதியை ஏற்றுக்கொள்ளாத காதலனின் குடும்பத்தினருடன் ஆனந்தராஜும் கைகோர்த்து, அவரை செத்துப்போ என அவதூறாக பேசி திட்டி இருக்கின்றனர்.
இது பிரபாவதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவே, அவர் விபரீத முடிவை எடுத்தது அம்பலமானது". இதனையடுத்து, ஆனந்தராஜ், அலெக்ஸாண்டர், ரஞ்சினி ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

