Jewelery Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை - அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம கும்பல் அதிர்ச்சி செயல்..!

தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Jewelery Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை - அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம கும்பல் அதிர்ச்சி செயல்..!
Thief / Usilampatti File Pic (Photo Credit: Pixabay / Wikipedia)

ஏப்ரல் 01, கோவில்பட்டி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சுபா நகரில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 43) என்பவர் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், கோவில்பட்டி அருகே இருக்கின்ற திருவேங்கடத்தில் உள்ள தனியார் பள்ளியில் இவரது மனைவி பிரபா சிபோரா (வயது 40) ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். HC On Sex Outside Marriage: “இது குத்தமாண்ணே.. குத்தமே இல்ல..” ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் தனது குடும்பத்தோடும் ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் ஒன்றாக நெல்லையில் உள்ள ஜவுளியில் துணி எடுப்பதற்காக சென்றுள்ளனர். பின்னர், இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு (Robbery Of Jewelery By Breaking The Locker) உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்த நிலையில் இருந்தன. பீரோவில் இருந்த சதீஷ்குமாரின் 50 பவுன் தங்க நகை, ராஜபாளையத்தை சேர்ந்த பிரியரூபாவதி என்பவருடைய 50 பவுன் நகைகள் என மொத்தமாக 100 பவுன் நகைகள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சதீஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் கொண்டும் சோதனைகள் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).