ஏப்ரல் 01, ஜெய்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் ரன்வீர் என்பவர் அவரது மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவரது மனைவி திடீரென 3 நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த ரன்வீர், தனது மனைவி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கானது, ராஜஸ்தான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போது, விசாரணையின் போது, ரன்வீரின் மனைவி, நீதிமன்றத்தில் ஆஜராகி, கடத்தல் கோரிக்கையை மறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் உறவில் (Sex Outside Marriage) இருந்ததாக தெரிவித்தார். இதன் காரணமாக, இந்த கடத்தல் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. Minor Girl Kidnap Attempt: பள்ளிக்கு சென்ற சிறுமியை நடுவழியில் கடத்த முயற்சி; சாமர்த்தியத்தால் தப்பிய மாணவி.. பதறவைக்கும் காட்சிகள்.!
இருப்பினும், அப்பெண்ணின் கணவர் ரன்வீர் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தார். அதில் ஒரு திருமணமான பெண், வேறொரு ஆணுடன் உறவில் இருப்பது, சமூக சீரழிவு. சமூக ஒழுக்கத்தை நிலைநாட்ட இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட வேண்டும், திருமணத்திற்கு புறம்பான உறவுகளை மன்னிக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்குப் பின் மற்றவருடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது என தெரிவித்துள்ளனர். மேலும் புகார்தாரரின் மனைவி யாரையும் திருமணம் செய்து கொள்ளாததால், பிரிவு 494-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.