Namakkal Suicide: திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்த விவகாரம்; கடன் தொல்லையால் நடந்த விபரீதம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
திமுக கவுன்சிலராக பணியாற்றி வரும் பெண்ணின் குடும்பத்தில் இருந்த கடன் சுமையால், குடும்பத்தினர் ஒருமனதாக முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
ஜூலை 13, ராசிபுரம் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (Rasipuram), பொம்மி தெருவில் வசித்து வருபவர் அருண் லால். இவர் கடைவீதி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடையை நடத்தி வருகிறார்.
அருண் லாலின் மனைவி தேவி பிரியா. இவர் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார். தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர்.
அப்போது, அருண் லால் மற்றும் தேவிப்பிரியா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Fever Food Tips: காய்ச்சல் ஏற்படும் போது நாம் என்ன சாப்பிடலாம்?.. உங்களுக்கு தேவையான அசத்தல் தகவல் இதோ.!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தம்பதியின் இரண்டாவது மகள் மௌனிகாவும் படுக்கையறையில் உயிரிழந்து இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையத்து, மூவரின் உடலையும் மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அருண் லால் கடன் தொல்லையில் இருந்து வந்தது உறுதியானது.
இதனால் அவர் தனது மகளுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, பின் தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 07:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

