Fever (Photo Credit: PIxabay)

ஜூலை 12, ஆரோக்கியம் (Health Tips): பருவமழை காலங்களில் உடல்நலக்குறைவு என்பது இயல்பான ஒன்று. இவ்வாறான சமயத்தில் பலருக்கும் காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும். காய்ச்சல் ஏற்படும் நேரத்தில் உணவு ரீதியாக பலரும் தடுமாற்றம் அடைவார்கள். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.

சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிர காய்ச்சலாக இருந்தாலும் சிலர் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும். சுற்றுப்புறத்தில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா & பூஞ்சை போன்ற கிருமி உடலுக்கு சென்றுவிட்டால் காய்ச்சல் ஏற்படும்.

உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து போராட, உடலின் நோயெதிர்ப்பு சக்தி செயல்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும்போது காய்ச்சல் ஏற்படும். காய்ச்சலுடன் தலைவலி, குமட்டல், வாந்தி, மூட்டு வலி இருந்தால் வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். Wipro AI 360: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதுமையை ஏற்படுத்த விப்ரோ முடிவு; 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு.!

காய்ச்சல் இருக்கும்போதே சிறுநீர் கழிக்கும் நேரத்தில் எரிச்சல், இரத்தம் வருதல் சிறுநீரக தொற்றை உறுதி செய்யும். கண்கள் மஞ்சள் நிறத்துடன் இருந்தால் கல்லீரல் தொடராக இருக்கலாம். தொண்டைவலி, இருமல் போன்றவை இருந்தால் நுரையீரல் தொற்றாக இருக்கலாம்.

கோடையில் தண்ணீர் குடிக்காமல் உடல் சோர்வாகி வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வந்தால் அது Heat Stroke எனப்படும். இதனால் அம்மை நோய்கூட ஏற்படலாம். மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல்கள் வருவதை உடல் பரிசோதனையில் உறுதி செய்யலாம்.

உடலின் வெப்பத்தை தெர்மாமீட்டர் கொண்டு நாம் கண்டறியலாம். காய்ச்சலின்போது உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு இருக்கும். இதனை அலட்சியமாக விட்டால் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். தண்ணீரை கொதிக்க வைத்து இக்காலங்களில் குடிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் 2 நாட்கள் உடலுக்கு ஓய்வு வழங்க வேண்டும். MSD on YogiBabu: சி.எஸ்.கே அணியில் யோகிபாபுவுக்கு வாய்ப்பு?. எம்.எஸ் தோனி கலக்கல் பதில்..!

காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர், பழசாறு, சூப் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை நமது உடலுக்குள் புகுந்து கிருமிகளுக்கு எதிராக செயல்படும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.

காய்ச்சலின்போது நமது வாய்க்கு நாம் வழக்கமாக சாப்பிடும் சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வாந்தி போன்ற உணர்வு இருப்பவர்கள் இட்லி சாப்பிடலாம். எக்காரணம் கொண்டும் வாய்க்கு பிடிக்கவில்லை என பட்டினி இருத்தல் கூடாது. துரித மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.