Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 25, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 33.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில்‌ தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. 25-01-2025 மற்றும்‌ 26-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 27-01-2025 மற்றும்‌ 28-01-2025 ஆகிய தேதிகளில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. Annamalai On Vengaivayal Case: வேங்கைவயல் சிபிசிஐடி விசாரணையில் வலுக்கும் சந்தேகம்: அண்ணாமலை கூறும் பரபரப்பு தகவல்.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

29-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 30-01-2025 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 31-01-2025 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகள்‌, நீலகிரி மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

இன்று (25-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (26-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 30-31 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.