Woman Died After Delivery: இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து மகப்பேறு மருத்துவர் பலி..!

புதுக்கோட்டையில் பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து, மகப்பேறு மருத்துவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Died After Delivery: இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து மகப்பேறு மருத்துவர் பலி..!
Death Hand (Photo Credit: Pixabay)

மே 02, புதுக்கோட்டை (Pudukottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி ராஜா - தமிழரசி. இத்தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் இவர்களது நான்காவது மகள் அஞ்சுதா (வயது 26). இவர் மகப்பேறு மருத்துவராக (Obstetrician), புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு கடந்த ஆண்டு, பெங்களூருவை சேர்ந்த பல் மருத்துவரான கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, கர்ப்பமடைந்த அவர் தனது தாய் வீட்டில் 6 மாத காலமாக இருந்து வந்துள்ளார். இவரது கணவர் மலேசியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது கறம்பக்குடிக்கு வந்தார். இந்நிலையில், அஞ்சுதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு, மூச்சுத்திணறல் அதிகரித்தது. President Of Colombia Sensational Announcement: இஸ்ரேல் உடனான உறவு முறிவு; கொலம்பியா அதிபர் பரபரப்பு தகவல்..!

இதனால் உடனடியாக அவர் பணிபுரிந்து வந்த அரசு ராணியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதனையடுத்து, கருப்பை குழாயில் அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் அதிகரித்து அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

பிரசவத்தில் மருத்துவர் அஞ்சுதா இறந்து போன சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் கணவர் ஆகியோரை சோகத்தில் ஆழ்த்தியது. இவரது 2 குழந்தைகளையும் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

(The above story first appeared on LatestLY on May 02, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).