மே 02, பெகோட்டா (World News): இஸ்ரேல் - ஹமாஸ் (Israel - Hamas War) இடையிலான போர் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையில் போர் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இதில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ரபா நகரிலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது. Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!
இந்நிலையில், பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் கொலம்பியா அதிபர் பெட்ரோ கலந்துகொண்டார். அதில், இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் நாட்டுடன் தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் நடக்கும் மனித உரிமை மீறலை இந்த உலக நாடுகள் வேடிக்கை பார்க்காது என்றும், உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தியதில் இருந்து, கொலம்பியா அதிபர் பெட்ரோ இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வந்தார். இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, இஸ்ரேல் நாடு கொலம்பியாவுக்கு ஏற்றுமதி செய்த பாதுகாப்பு தளவாடங்களை தடை செய்துள்ளது.