Forest fire (Photo credit: pixabay)

மார்ச் 18, கொடைக்கானல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வறண்ட சூழல் நிலவி வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் என அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக, கொடைக்கானல் மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் எளிதில் காட்டுத் தீ பரவி வருகிறது. Wooden Cotton Fire Accident: மர குடோனில் பயங்கர தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்.!

நேற்று நண்பகலில் மச்சூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. மேலும், இதன் அருகே உள்ள பெருமாள்மலை வனப்பகுதி மற்றும் வருவாய் நிலப்பகுதி, தனியார் நிலப்பகுதி, பழனி மலைச்சாலை ஆகிய பகுதிகளிலும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகள், அரிய வகை மரங்கள் என அனைத்தும் எரிந்து சேதமாகும் ஆபத்து உள்ளது. காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் காட்டில் உள்ள விலங்குகளும் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் நிலைமை உண்டாகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் காட்டுத் தீயை விரைவில் அணைத்து பழமையான மரங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.