Auto Driver Arrested: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!

தேனியில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Auto Driver Arrested: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!
Sexual Harassment (Photo Credit: Pixabay)

அக்டோபர் 18, ஆண்டிபட்டி (Theni News): தேனி மாவட்டம்,‌ ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் (Nursing Student) நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்து, மீண்டும் கல்லூரிக்கு செல்ல, சில தினங்களுக்கு முன் சொந்த ஊரில் இருந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார். அந்த ஆட்டோவை டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த அழகு முருகன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதி சாலையில் வந்தபோது, ஆட்டோவை நிறுத்திய அவர், நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளார். CPR Treatment For Priest: கதவை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பொதுமக்கள்..!

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, அவர் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநர் அழகு முருகனை நேற்று (அக்டோபர் 17) கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(The above story first appeared on LatestLY on Oct 18, 2024 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).