Prostitute Women Arrested: ரகசியமாக நடந்த பாலியல் தொழில்.. வடமாநில பெண்கள் 5 பேர் கைது..!
சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட அசாம் மாநில பெண்கள் மற்றும் இடைதரகரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 11, சென்னை (Chennai News): சென்னை, பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லதம்பி பிரதான சாலையில் பாலியல் தொழில் (Prostitution) நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின்பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வணிக மையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடியில், காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், அசாம் (Assam) மாநில பெண்கள் 5 பேர் பிடிபட்டனர். TN Weather Update: எச்சரிக்கை.. உச்சியை பிளக்கப்போகும் வெயில்.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரனையில், ஆன்லைன் மூலமாக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், இடைதரகராக (Broker) செயல்பட்டு வந்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (வயது 44) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், அசாம் மாநில பெண்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

