Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 11, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 248.4 மி.மீ. இயல்பைவிட 357.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

நாளைய வானிலை (Tomorrow weather): தமிழ்நாட்டில் மழை முடிந்து வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் 100°F க்கும் மேல் வெப்பநிலை பதிவானது. மேலும் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Immanuel Sekaran: மறைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் வரலாறு.. கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன.?

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.