Teenager Arrested For Stashing Cocaine At Home: ரூ.12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்; வாலிபர் கைது..!

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Teenager Arrested For Stashing Cocaine At Home: ரூ.12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்; வாலிபர் கைது..!
Prison Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, அண்ணாநகர் (Chennai News): சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கொக்கைன் (Cocaine) போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். Woman Arrested In POCSO Act: 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது இளம்பெண்..! – 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..!

இந்நிலையில், அமைந்தகரை திரு.வி.க நகர் பகுதியில் மீண்டும் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அண்ணாநகர் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து, போதைப்பொருள் விற்பனை செய்து வரும் கும்பலை பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 25) என்பவர், பெங்களூருவில் இருந்து 1 கிராம் கொக்கைன் 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து, இங்குள்ள பணக்கார குடும்ப கல்லூரி மாணவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக, காவல்துறையினர் லோகேஷின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். இதில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் மதிப்பிலான 120 கிராம் கொக்கைனை காவல்துறையினர் கைப்பற்றி, லோகேஷை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 17, 2024 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).