ஏப்ரல் 17, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான 16 வயது சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் மூலம் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்து (Woman Pregnant), ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுபற்றி சிறுவனின் தாயாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி அன்று டேராடூன் வசந்த் விகார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். AC Details: கோடைகாலத்தில் வீட்டில் ஏசி எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? – விவரம் உள்ளே..!

இதனையடுத்து, புகாரின்பேரில் 16 வயது சிறுவனுடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த அந்த இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டேராடூனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அப்போது, அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 30 வயது இளம்பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இச்சம்பவம் முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.