Dead Lizard In Wine: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.. மது பாட்டிலில் மிதந்த செத்த பல்லி..!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள, பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 14, தருமபுரி (Dharmapuri): தருமபுரி மாவட்டத்தில் உள்ள, பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நண்பர்கள் குழு ஒன்று 12 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அப்போது அதில் ஒரு பாட்டிலில் பீர் குறைவாக இருந்துள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்க சென்றபோது மற்றொரு பீர் பாட்டில் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்துள்ளது. அதனைப் பார்த்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Bhogi Celebration in Tamilnadu: போகி பண்டிகையை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்: நடனம் ஆடி, பழையதை கொளுத்தி கொண்டாட்டம்.!
அவர்கள் தொடர்ந்து கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரசு மதுபான கடை சற்று நேரம் மூடப்பட்டது. பின்னர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் வந்து, அந்த நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.