Bhogi Festival (Photo Credit: @ANI X)

ஜனவரி 14, சென்னை (Chennai): இந்திய வரலாற்றில் தனக்கென மிகப் பெரிய தனி வரலாறை கொண்ட தமிழ் மக்கள், தை மாதத்தின் முதல் நாளை அறுவடை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். சூரிய நாட்காட்டியின்படி, தை மாதத்தின் முதல் தேதி, ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அறுவடை திருவிழா தமிழர்களால் பொங்கல் (Pongal Festival Celebration 2024) பண்டிகையாக சிறப்பிக்கப்படுகிறது.

அறுவடை திருநாள்: இந்த பொங்கல் பண்டிகை முதல் நாள் சூரிய பொங்கலாகவும், மறுநாள் மாட்டுப் பொங்கலாகவும், இறுதி நாள் காணும் பொங்கலாகவும் பிரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் இவை மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுவது போல, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. உழவுக்கு முதல் தலைவனாக இருக்கும் சூரியனுக்கும், அதற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. TH Musthafa Passes Away: கேரள காங்கிரசின் முக்கிய புள்ளி, முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.! 

போகி பண்டிகை: 2024ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நாளை சிறப்பிக்கப்பட உள்ள நிலையில், பொங்கலுக்கு முதல் நாளான போகி அன்று, "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற பழமொழிக்கேற்ப பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது தொடர்ந்து வருகிறது. இதன் வாயிலாகவே பொங்கல் பண்டிகையானது தமிழகத்தில் அறிமுகமாகிறது. இதனால் நேற்று பல இடங்களில் போகிக்காக பழைய பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

களைகட்டும் பொங்கல் பண்டிகைகள்: அதனைத்தொடர்ந்து, நாளை பொங்கல் பண்டிகையின் போது சுவையான பொங்கல் தயாரிக்கப்பட்டு அக்கம்பக்கத்தினருக்கு வழங்கப்படும். மாட்டுப்பொங்கலில் விவசாய பெருமக்கள் தங்களது கால்நடைகளுக்கு மரியாதை செய்வார்கள். காணும் பொங்கல் அன்று மக்கள் தங்களது உற்றார்-உறவினர்கள், நண்பர்களை நேரில் சென்று பார்க்க காணும் பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.

கொண்டாட்டங்கள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகபுகப்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உட்பட பல இடங்களை ஜல்லிக்கட்டு (Jalikattu) போட்டிகளும், ரேக்ளா பந்தயங்களும் நடைபெறவுள்ளன. அந்தந்த பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும்.

நடனமாடி உற்சாகமாக களைகட்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள்:

பழைய பொருட்களை கொளுத்தி போகியை வரவேற்ற மக்கள்: