Salem Wardens Arrested: சிறை அதிகாரிக்கே சிறையில் தண்டனை.. 20 வயது இளம்பெண் மிரட்டி பலாத்காரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

தவறு செய்தவர்கள் திருந்த அமைக்கப்பட்டுள்ள சிறையில் பணியாற்றும் 2 அதிகாரிகளே இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் நெஞ்சை பதறவைக்கும் வண்ணமே அமைந்துள்ளது.

Salem Wardens Arrested: சிறை அதிகாரிக்கே சிறையில் தண்டனை.. 20 வயது இளம்பெண் மிரட்டி பலாத்காரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!
Feature Image: Masked 2 Person are Warden (Visuals from Spot)

ஜனவரி 13, அஸ்தம்பட்டி: சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் (Azhakapuram, Salem) பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு 11 மணியளவில் சேலம் மத்திய சிறை முன் (Central Prison, Salem) நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இருந்த காவல் துறையினர், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது வார்டன் தன்னை காதலிக்கிறார் என்றும், அவருக்கு நான் இங்கு காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சுக்களில் எதோ மழுப்பல் இருந்துள்ளது.

இதனால் உண்மையை கூறுங்கள் என காவல் துறையினர் கண்டிப்புடன் கேட்டதும், சிறைச்சாலையில் பணியாற்றி வரும் 2 வார்டன்கள் (2 Wardens Sexually Abused 20 Aged Young Girl) தன்னை ஆபாச படமெடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன காவல் துறையினர், மறுநாள் காலையில் அஸ்தம்பட்டி காவல் நிலையம் சென்று புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். அவரின் விபரத்தையும் கேட்டு தெரிந்துகொண்டுள்ளனர். Temple Fired Mystery: நள்ளிரவு வரை இருமுடிக்கட்டு பூஜை… காலையில் பக்தர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. கருகிப்போன இருமுடிகள்.! 

நேற்று பெண்மணி அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தனது நிலை குறித்து புகார் அளிக்கையில் பகீர் சம்பவம் அம்பலமானது. அதாவது, கடந்த 6 மாதங்களுக்கு முன் சேலம் சிறைச்சாலை வார்டனுடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் முகநூல், இன்ஸ்டா, வாட்ச, வீடியோ கால் என மகிழ்ச்சியாக உரையாடி வந்துள்ளனர். இப்படியாக ஒருநாள் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற வார்டன், அங்கு நான் உன் காதலன் உன்னையே கரம்பிடிப்பேன் என கம்பிக்கட்டும் கதையை கூறி பாலியல் ஆசைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை கவனித்த மற்றொரு வார்டானோ, அதனை தனக்கு சாதகமாக மாற்றி பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து வைத்த மிரட்டல் வார்டன், அவ்வப்போது பெண்ணை பலாத்காரம் செய்து வந்ததும், அதற்காக நேரில் வரவழைப்பதுமாக இருப்பது அம்பலமானது.

பெண்ணின் புகாரை ஏற்ற அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, சேலம் மத்திய சிறைச்சாலை இரண்டாம் நிலை வார்டன்கள் அருண் & சிவசங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

தவறு செய்தவர்கள் தான் சிறைக்கு வருவார்கள் என்றால், சிறையில் அதிகாரியாக பணியாற்றி பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 13, 2023 08:08 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 08:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).