ஜனவரி 12 , காட்டுபாளையம்: திருப்பூர் மாவட்டத்தில் (Vijayapuram, Tiruppur) உள்ள விஜயாபுரம் - காட்டுபாளையம் பகுதிக்கு இடையே யாசின்பாபு நகரில் புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல, நேற்றிரவு பூஜைகளை முடித்து இருமுடி கட்டுகளை கோவிலில் வைத்து சென்றுள்ளனர். இன்று காலை மேல்மருவத்தூர் செல்லவிருந்த அவர்கள் இருமுடி கட்டுகளை எடுக்க கோவிலுக்கு வந்தபோது அனைத்தும் எறிந்த நிலையில் கிடைத்துள்ளன.
மேலும், கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகளும் திருப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நல்லூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். Theni Spoiled Chicken: கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் பிராய்லர் கோழிக்கடை.. தேனியில் பகீர் சம்பவம்.. குழம்பில் புழுக்கள்..!
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கோவிலில் திரண்டு மர்மநபர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அத்துடன் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு கொள்ளையடித்த மர்மநபர்கள் யார்?, எதற்காக இருமுடி கட்டுக்கு தீ வைத்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.