Edappadi Horror: உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல் போட்டு கொடூர கொலை: 78 வயது கணவர் அதிர்ச்சி செயல்.!
ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அதிகாரி, தனது மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
நவம்பர் 17, எடப்பாடி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, கொங்கணாபுரம், எருமைப்பட்டி கிராமம், கூத்தடிப்பாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 78). இவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர் ஆவார். இவரின் மனைவி லட்சுமி (வயது 72).
தம்பதிகளுக்கு ராஜா, ஜெயக்குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு நேரத்தில் கந்தசாமி குடும்பத்தினருடன் இரவு நேர உணவை சாப்பிட்டு தூங்கி இருக்கிறார். கந்தசாமி & லட்சுமி ஒரு அறையிலும், இரண்டு மகன்களும் மற்றொரு அறையில் உறங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் திடீரென கண்விழித்த கந்தசாமி, உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் லட்சுமி நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். Theni Shocker: அனுமதினமும் மனைவிக்கு போதையில் உறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு.. அந்த உறுப்பிலேயே மிதித்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை.!
சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மகன்கள், தாய் இரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். பின்னர், இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கந்தசாமி கடந்த சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதற்காக ஈரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனிடையேதான் தன்னுடன் உறங்கிய மனைவியை கொடுரமாக கொலை செய்துள்ளார். இதனால் அதிகாரிகள் கந்தசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

