Cuddalore Accident: காரில் இருந்து இறங்கியதும் திரைப்பட பாணியில் விபத்து; அரசுப்பேருந்து மோதி இளைஞர் பலி.!

சாலையில் வாகனம் வருகிறதா? என பார்க்காமல் அலட்சியமாக காரில் இருந்து இறங்கியவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் குடும்பத்தினர் கண்முன் நடந்துள்ளது.

Cuddalore Accident: காரில் இருந்து இறங்கியதும் திரைப்பட பாணியில் விபத்து; அரசுப்பேருந்து மோதி இளைஞர் பலி.!
Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

அக்டோபர் 07, கடலூர் (Cuddalore News): சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்ராஜ். டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி நோக்கி காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். இவர்கள் பயணித்த கார், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. Edappadi Palanisamy: விமானப்படை சாகசம் 5 பேர் உயிரிழப்பு விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.. பரபரப்பு பேட்டி உள்ளே.!

அரசுப்பேருந்து மோதியது:

ஓட்டுநர் டீ குடிக்க காரில் இருந்து இறங்கிச் சென்ற நிலையில், காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த தேன்ராஜ், திடீரென காரின் கதவைத் திறந்து கீழே இறங்கி இருக்கிறார். அப்போது, அவ்வழியாக சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்த அரசு விரைவுப்பேருந்து மோதி உயிருக்கு துடிதுடித்தார்.

பரிதாப மரணம்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயண வழியில், ஒரு நொடி அலட்சியத்தில் உயிர் பறிபோயுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).