அக்டோபர் 07, எடப்பாடி (Salem News): சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படையின் 92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு, வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் நடந்த சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், 5 பேர் நீரிழப்பு பிரச்சனை காரணமாக உயிரிழந்தனர். 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மெரினா நோக்கி வந்ததால், சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. சிறப்பு பேருந்துகள், இரயில், மெட்ரோ சேவை, சொந்த வாகனங்கள் என பயணம் மேற்கொண்டு வந்தவர்கள், பின் அங்கிருந்து திரும்ப இயலாமல் போக்குவரத்து நெரிசலால் தவித்துப்போயினர். அரசின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அளவுக்கு அதிகமாக குவிந்த மக்களால், முன்னேற்பாடுகள் போதுமான அளவு இல்லாத சூழல் ஏற்பட்டது. இந்த விஷயம் எதிர்கட்சிகளிடையே கடும் விவாதத்தையும் உண்டாக்கியது. மக்கள் நலவாழ்வு & மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தபோது, பத்திரிகையாளர்கள் - அமைச்சர் இடையே வாத சூழலும் உண்டாகியது. 11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "எவ்வுளவு பேர் வருவார்கள் என திட்டமிட்டு, அதற்கேற்ப குடிநீர், கழிவறை உட்பட பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு வந்தவர்களில் ஐவர் விலைமதிப்பற்ற உயிரை இழந்துள்ளனர். இது அரசின் செயலற்ற தன்மை ஆகும். இவ்வாறான விமான சாகச நிகழ்ச்சி பிற இடங்களில் நடந்தபோது சிறந்த முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். போதிய வசதிகள் இல்லாததன் காரணமாகவே பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். Minister Ma. Subramanian: விமானப்படை சாகசத்தை காணவந்து ஐவர் பலியான விவகாரம்.. காரணம் என்ன?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.!
முதல்வர் மு.க ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும்:
பல இலட்சம் மக்கள் கூடுவார்கள் என உளவுத்துறை மூலமாக தகவலை பெற்று அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அன்று எப்படியெல்லாம் பேசினார். மக்களை பாதுகாப்பதே அரசின் கடமை. அரசின் சார்பில் அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் மெரீனாவுக்கு மக்கள் வாருங்கள் என அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அவர் வந்து சென்றுவிட்டார். அரசின் தவறை மறைக்க இன்று ஆட்சியாளர்கள் என்னென்ன பேசுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பையும் முக ஸ்டாலின் ஏற்க வேண்டும். உயிரே போய்விட்ட போதிலும், அவர்களுக்கு நிதிஉதவி கொடுத்து என்ன பயன்?. தற்காலிக்காக உதவியை அவர்களுக்கு வழங்கும். சாதாரண மக்கள் ஆவலுடன் அதனை காண அதிகம் வந்துவிட்டார்கள் என சாக்கு சொல்லி தப்பிக்க முயற்சிப்பது நல்லது. இனி வரும் நாட்களிலாவது அரசு உளவுத்துறையின் தகவலை பெற்று இலட்சக்கணக்கில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடுத்த வேண்டும். எதற்காக இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார்?. அரசு சரியாக செயல்பட்டால் நாங்கள் ஏன் தவறு என சொல்லப்போகிறோம்" என பேசினார்.