Sivaganga Accident: தாயகம் திரும்பிய சில நாட்களில் இளைஞருக்கு நடந்த சோகம்; இருசக்கர வாகனம் - சரக்கு வேன் மோதி இருவர் பரிதாப பலி.!
வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தவர், வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிப்ரவரி 09, திருப்பத்தூர் (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அருணாச்சலம், இவரின் மகன் பழனிச்சாமி (வயது 23). கல்லூரி படிப்பு முடிந்ததும் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வந்தவர், சமீபத்தில் பெற்றோரை பார்க்க சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
இருசக்கர வாகனத்தில் பயணம்: பழனிச்சாமியின் உறவினர் தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர். இவரின் மகன் சக்தி (வயது 16). சிறுவன் திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றுவிட்டு, மேற்படி படிக்காமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் பழனிச்சாமி மற்றும் சிறுவன் சக்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர். Avaram Poo Benefits: சர்க்கரை நோய், நாவறட்சியை கட்டுப்படுத்தும் ஆவாரம்பூ; அசத்தல் நன்மைகள் இதோ.!
தபால்துறை வாகனம் மோதி சோகம்: இருவரும் ஊர்குளத்தான்பட்டியில் இருந்து திரும்பினர் நோக்கி பயணிக்க, அச்சமயம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி பயணித்த தபால்துறைக்கு சொந்தமான அஞ்சல் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகினர். மணமேல்பட்டி பகுதியில் தபால்துறை வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வளைவில் திரும்பியபோது விபத்தில் சிக்கியது.
அதிகாரிகள் விசாரணை: இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இருவரும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

