Avaram Poo (Photo Credit: Indiamart.com)

பிப்ரவரி 09, சென்னை (Chennai): கிராமப்புறங்களில் உள்ள காட்டுப்பகுதியில், விதைகளே தூவாமல் இயற்கையாக பரவி வளரும் தன்மை கொண்டவை ஆவாரம்பூ (Avarampoo). இவற்றை தைப்பொங்கலன்று காப்புக்கட்ட, கால்நடைகளுக்கு மாலை கட்ட பிரதானமாக பயன்படுத்துவார்கள். வாழைபோல சுப நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்படும் தோரணங்களில் இடம்பெறும் ஆவாரம்பூ, தன்னகத்தே பல நன்மைகள் தரும் செடி ஆகும்.

குறிஞ்சிப்பாட்டில் ஆவாரம்பூ (Senna Auriculata): சங்ககாலத்தில் இருந்தே ஆவாரம்பூவின் பயன்பாடு தமிழகத்தில் இருப்பதாய் குறிஞ்சிப்பாட்டு உறுதி செய்கிறது. குறிஞ்சியில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஆவாரம்பூவும் ஒன்று ஆகும். "ஆவாரப் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற பழமொழியே அதற்கு சாட்சி ஆகும்.

மருத்துவ குணங்களை கொண்டது: பார்ப்பதற்கு பொன்னிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம், தரிசு நிலங்கள் மற்றும் வயல் வரப்புகளில், கடுமையான வறட்சி நிலவும் தருணத்திலும் தன்னிச்சையாக வளரும் தன்மை கொண்டது ஆகும். இதன் பூ, காய், பட்டை, வேர், இலை முதலியன மருத்துவ குணங்களை கொண்டு வாழைபோல செயல்படுவதால், பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். GSLV-F14 NSAT-3DS Mission: வானிலை தகவலை துல்லியமாக பெற அதிநவீன செயற்கைகோள்; விண்ணில் பாய்வது எப்போது?.. முழு விபரம் இதோ.! 

நீரழிவு நோய் கட்டுப்பட: ஆவாரை பூவினை தினம் மேஞ்சாக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு மென்று வர நீரிழிவு நோய், உடற்சோர்வு, நாவறட்சி, தூக்கமின்மை சரியாகும். ஆவாரை பூ, இலை ஆகியவற்றை வெயிலில் சேர்த்து பொடித்து கஷாயம் போல காய்ச்சி, பாலில் சேர்த்து குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மூலம், உடல் சூடு குறைய: உடலில் துர்நாற்றம் சார்ந்த பிரச்சனை உடையோர், ஆவாரம்பூவினை உணவில் சேர்க்கலாம். உடல் சூட்டினை குறைக்க ஆவாரம்பூ கஷாயம் குடிக்கலாம். நாவறட்சியும் நீங்கும். உடல் சூட்டினால் கண்கள் சிவக்கும் பிரச்சனை உடையோர், ஆவாரம்பூவை உலர்த்தி நீர்விட்டு அரைத்து கண்களின் புருவத்தின் மீது பற்று போல போட, கண்களின் சிவப்பு நிறம் மாறும். மூலம் சார்ந்த பிரச்சனைகள் சரியாக சமளவு ஆவாரம் பூ, அருகம்புல் வேர் சேர்த்து காயவைத்து பொடித்து நாளொன்றுக்கு இரண்டு வேளைவீதம் சாப்பிட நற்பலன் கிடைக்கும்.

குறிப்பு: ஆவாரம்பூ பருகும் சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் அதனை எடுத்துக்கொள்வது நல்லது. அதிக சர்க்கரை அளவு ஆவாரம்பூ பருகும்போது மிகக்குறைந்த அளவு மாற வாய்ப்புள்ளது. ஆதலால் அலட்சியமான செயல் உயிரை பறிக்கலாம்.