Rural Agricultural Experience Training Program: ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டம்.. பொது மக்களுக்கு சிப்பி காளான் வளர்ப்பு முறை குறித்து விளக்கம் அளித்த மாணவிகள்..!
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கேசரிமங்கலத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் சிப்பி காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
மே 03, ஈரோடு (Vridhachalam News): ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் (Rural Agricultural Experience Training Program), அம்மாபேட்டையில் உள்ள கேசரிமங்கலத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் சிப்பி காளான் வளர்ப்பு முறை (Mushroom Cultivation) குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஈரமான நிலப்பரப்பில் வைக்கோல் மற்றும் தாய்வித்து போன்றவற்றை பயன்படுத்தி எவ்வாறு சிப்பிக்காளான் வளர்ப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதில் ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள் இது குறித்த தங்களுடைய சந்தேகங்களை மாணவிகளிடையே கேட்டு தெளிவு பெற்றனர். Caviar Gold Plated Bike: கேவியர் நிறுவனத்தின் முதல் இ- பைக்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
பூஜ்ஜிய ஆற்றல் குளிரறை குறித்து மாதிரி செயல் விளக்கம்: மேலும் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் அம்மாபேட்டை வட்டாரம் கோம்பூர் அருகே பூஜ்ஜிய ஆற்றல் குளிரறை குறித்து மாதிரி செயல் விளக்கம் அளித்தனர். பூஜ்ஜிய ஆற்றல் குளிரறை (Zero energy refrigerator) என்பது குறைந்த விலையில் உருவாக்க கூடிய ஒரு கட்டமைப்பு ஆகும். செங்கல் மற்றும் மணல் கொண்டு இதனை கட்டமைக்கலாம். இரு அடுக்கு செங்கல் கட்டமைப்புக்கு இடையே மணலைக் கொட்டி அதனை ஈரபதத்துடன் வைப்பதன் மூலம் அதனுள் வைக்கும் காய்கறிகள் வாடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிக்கு பதிலாக குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இம்மாதிரியை குமரகுரு வேளாண் மாணவிகள் செய்து காட்டினர்.