டிசம்பர் 04, விசாகப்பட்டினம் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று, பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கிய நடிகை சமந்தா (Samantha), திருமணம் முடிந்த 3 ஆண்டுகளில் கணவரிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விவகாரத்து பெற்றார். Actor Sivakarthikyen: தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.!
சைதன்யா - சோபிதா தம்பதி திருமணம்:
விவாகரத்துக்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யா, எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும், பிரபல நடிகை சோபிதா துளிபலாவும் (Sobhita Dhulipala) திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் திருமண நிச்சயம் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் டிசம்பர் 4 ஆம் தேதியான இன்று, பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
திருமணம் முடிந்தது:
அதன்படி, தெலுங்கு பாரம்பரியபடி தம்பதிகள் இருவரும் கரம்பிடித்தார். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில், இன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனிடையே, தம்பதிகளின் திருமணம் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது. அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா & சோபிதா தம்பதியின் திருமணம் குறித்த முதல் புகைப்படம்:
View this post on Instagram