டிசம்பர் 04, சென்னை (Cinema News): ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘ஒன்பதுல குரு ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் 2013-ல் மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். 2019 மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார். தொழிலதிபராகவும் வலம் வருகிறார். Pushpa 2: "புஷ்பாங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்" டிக்கெட் முன் பதிவில் ‘புஷ்பா 2’ சாதனை!
கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக பிரச்சனை காரணமாக, வீட்டில் ஓய்வில் இருந்து வரும் பவர்ஸ்டார் சீனிவாசன், நேற்று மாலை தன்னுடைய பயணத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.