டிசம்பர் 04, சென்னை (Cinema News): சென்னை, முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா, போதைப்பொருட்கள் (Drugs) விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 நபர்களை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து வந்து இங்குள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
மேலும், அவர்களின் செல்போனில் பதிவான எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் (Actor Mansoor Ali Khan) மகன் அலிகான் துக்ளக் (வயது 26) செல்போன் நம்பரும் அதில் இருந்துள்ளது. இதனையடுத்து, அவரை காவல்நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்தனர். இன்னும் 3 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில், அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அலிகான் துக்ளக் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். மேலும், 'கடமான் பாறை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.