டிசம்பர் 04, சியோல் (World News): தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol), நேற்று (டிசம்பர் 03) இரவு அந்நாட்டு தொலைக்காட்சி திரையில் தோன்றி, "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசு தன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராணுவ ஆட்சி (Military Rule) பிரகடனப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தென் கொரியா மீண்டும் சரியாக கட்டமைத்து பாதுகாக்க உள்ளேன். இதன்காரணமாக நாட்டுக்கு எதிராக இருப்பவர்கள் சீக்கிரம் அழிக்கப்பட்டு, மீண்டும் தென் கொரியா பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்" என்று அறிவித்தார். Malaysia Flood: வரலாறு காணாத மழையால் ஸ்தம்பித்து போன மலேசியா, தாய்லாந்து - 30 பேர் பலி..!
வாபஸ் பெற காரணம்:
இந்நிலையில், இந்த அறிவிப்பு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் (Military Rule Withdrawn) பெறப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் கீழான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யூன் சுக் இயோல். இவர் பதவி வகித்ததில் இருந்தே அவர் இயற்றிய சட்டங்கள், அவர் எடுத்த முடிவுகளால் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. அதிபர் மற்றொரு கட்சியை சேர்ந்தவர், உறுப்பினர்கள் இன்னொரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இயோல் கொண்டு வரும் பெரும்பாலான சட்டங்களுக்கு உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது.
அதிபருக்கு கடும் எதிர்ப்பு:
சமீபத்தில் அடுத்த 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இயோல் கொண்டுவந்தபோது, இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எதிர்க்கட்சி தரப்பில் இருந்து வந்தது. இதனால் தான் அவர் நேற்று அறிவிக்கப்பட்ட ராணுவ ஆட்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இயோல் இந்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, இயோலை பதவி விலகச் சொல்லி ஜனநாயக கட்சியினர் கூறினர். மேலும், அவர் மீது தேசத் துரோக மசோதா ஒன்றும் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சி எதிர்ப்பு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் போராட்டம், கடைகள் மூடல், தென் கொரியா பங்குச்சந்தை வீழ்ச்சி என பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை இயோல் ராணுவ ஆட்சி அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டார்.